மட்டு.மண்முனை மேற்குபுது மண்டபத்தடி பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்

0
147

மட்டக்களப்பு மண்முனை மேற்கு புது மண்டபத்தடி பிரதேச வைத்தியசாலையில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் மற்றும் புது மண்டபத்தடி சண்முகா இளைஞர் கழக
இணைந்து சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்சன் யூனிட்டி லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன்
பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் மற்றும் புது மண்டபத்தடி சண்முகா இளைஞர் கழகங்கள் இணைந்து இந்த சிரமதானப் பணியில் ஈடுபட்டன.
வைத்தியசாலைக்கு வைத்திய சிகிச்சைக்காக வருகை தரும் பொது மக்களின் நலன் கருதி சிரமதானம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.