மட்டக்கப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ இயந்திர உபகரணங்களின் தேவைப்பாடு அதிகரித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் இணைப்பாக்க அமெரிக்கன் மிஷன் சமூக சேவை நிலையத்தின்அனுசரணையில் 11 மில்லியன் பெறுமதியான பி.சி.ஆர் இயந்திரத்தை அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

மாட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தை தொடர்ந்த மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் குறித்த பி.சி.ஆர் இயந்திரம் கையளிக்கப்பட்டது.
