மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மறைக்கோட்ட திருப்பாலத்துவ சபையின் நிரத்தர அங்கத்தர்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் விசேட திருப்பலியும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூயகாணிக்கை அன்னை ஆலயத்தில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட திருப்பாலத்துவசபையின் இயக்குனர் அருட்தந்தை
ஜெரிஸ்டன் வின்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மறைக்கோட்ட திருப்பாலத்துவ சபையின் நிரத்தர அங்கத்தர்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வில் தேசியபாலத்துவ சபையின் தேசிய இயக்குனர் அருட்தந்தை பெசில்ரோகான் பெர்னாண்டோ அடிகளார் கலந்து கொண்டு திருப்பாலத்துவ சபையின் நிரத்தர அங்கத்தர்வர்களுக்கான 350திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான சின்னங்களை வழங்கி வைத்தார் .
நிகழ்வில் மறைக்கோட்ட திருப்பாலத்துவசபையின் அங்கத்தர்வர்களுக்கான மாணவர்கள்,மறைஆசிரியர்கள் ,அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை நாளைய தினம் கல்முனை மறைக்கோட்ட திருபாலத்துவசபை அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.