மட்டு.மாநகர சபை நடாத்திய
பௌர்ணமி கலை விழா

0
247

மட்டக்களப்பு மாநகர சபை நடாத்தும் பௌர்ணமிக் கலை விழா நேற்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.

கலை, கலாசார குழுத்தலைவரும், மாநகர உறுப்பினருமான எம் . சண்முகலிங்கம் தலைமையில் நடைபெற்ற பௌர்ணமிக் கலை விழா நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர ஆணையார் என் .மதிவண்ணன் ,பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் ,பிரதி .ஆணையாளர் உ .சிவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மங்கள விளக்கேற்றலுடன் மாநகர கீதம் பாடப்பட்டு ஆரம்பமான பௌர்ணமிக் கலை விழாவில் வரவேற்பு உரையினை பிரதி முதல்வர் நிகழ்த்த தலைமை உரையினை கலை, கலாசார குழுத்தலைவரும், மாநகர உறுப்பினருமான எம் . சண்முகலிங்கம் வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைகலாசாரத்தினையும் தமிழர்களின் பண்பாட்டு கலை இலக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் 2018 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று நடாத்தப்பட்டு வந்த பௌர்ணமிக் கலை விழா கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் மட்டக்களப்பு மாநகர சபையினால் . 2022 ஆம் ஆண்டு ஐப்பசி மாத பௌர்ணமி கலை நிகழ்வாக பௌர்ணமிக் கலை விழா மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடாத்தப்பட்டது

இந் நிகழ்வில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவபடுத்தும் கலைஞர்கள் , மாணவர்களின் , நர்த்தன நாட்டியம், நாடகம், போன்ற கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் ஆணையாளர் கே .சித்திரவேல மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ,மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.