மட்டு.மாமாங்கம் கிராம மக்களின்
வீட்டு கிணறுகளில் மீன்குஞ்சுகள் இடல்

0
163

டெங்கு நுளம்பு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கிணறுகளுக்கு மீன்குஞ்சுகள் இடும் நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட்டன.

கிணற்று நீர் மூலம் பெருகும் நுளம்பு குடம்பிகளை அழிக்கும் வகையில் கிணறுகளுக்கான மீன் குஞ்சுகள் இடும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாமாங்கம் பொதுசுகாதார பிரிவில் அதிகரித்து காணப்படும் டெங்கு நுளம்பு பெருக்கத்தினை அளிக்கும் வேலைத்திட்டத்திற்கு உதவும் வகையில் மட்டக்களப்பு மாமாங்கம் மற்றும் சகாயபுரம் கிறிஸ்தவ வாழ் சமூகத்தினரின் பங்களிப்புடன் அருட்தந்தை பிறைனர் அடிகளாரால் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ . உதயகுமாரிடம் ஒரு தொகை மீன்குஞ்சுகள் கையளிக்கப்பட்டன

இதனைத் தொடர்ந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ . உதயகுமார் தலைமையில் மாமாங்கம் பொதுசுகாதார பரிசோதகர் எஸ் . கிரிஷாந்தராஜா வழிகாட்டலின்மாமாங்கம் பொதுசுகாதார பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட வீட்டு கிணறுகளுக்கான மீன்குஞ்சுகள் இடும் நடவடிக்கைகள் கிராம பொதுமக்களின் பங்களிப்புடன் டெங்கு களத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது .