தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகமாக உள்ள மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் அனைத்து சுகாதார அலுவலக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார அலுவலக பிரிவில் மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நாட்களாக அறிவிக்கப்பட்டு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் டெங்கு நுளம்புகள் அதிகமாக உள்ள பகுதியாக இனம் காணப்பட்ட மட்டக்களப்பு கருவப்பங்கேணி பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் வீடுகள் ,பாடசாலைகள் மக்கள் ஒன்று கூடும் பொது இடங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் வழிகாட்டலின் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமாரை தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு பணியில் மாவட்ட பூச்சியியலாளர் கே.தர்சினி ,மேற்பார்வை பொதுசுகாதார உத்தியோகத்தர் வி . ரமேஸ்குமார் ,பொதுசுகாதார பரிசோதகர்கள் ,சுகாதார பூச்சியியல் பிரிவு குழுவினர் பொலிஸ் ,உத்தியோகத்தர்கள் , முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இன்று மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு சோதனை நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் டெங்கு நுளம்பு பெருகும் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது