மட்டு.மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளராக சி.புவனேந்திரன் நியமனம்

0
204

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளராக சி.புவனேந்திரன் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த 7வருடங்கள் போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய சி.புவனேந்திரன் இன்று முதல் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பணிப்பாளரை மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் உட்பட மாவட்ட செயலக சமுர்த்தி திணைக்கள பிரிவு உத்தியோகத்தர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றார்.