மட்டக்களப்பு மாவட்ட நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகள் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மதுரங்கேணிகுளம், குஞ்சங்குளம் ஆகிய கிராமங்களில்
முன்னெடுக்கப்பட்டன.
‘ஒரு நாளில் உன்னை மகிழ்விப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கீழ் ‘கிராமிய மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு ‘ மற்றும் ‘சிறுவர் கழகங்களை ‘ மீழமைப்புச் செய்வதும் , சிறுவர்களுக்கான படைப்பாக்க திறன் மற்றும் வாழ்க்கைத்தேர்ச்சி சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரனின் வழிகாட்டலில்
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற பெற்றோர்கள், சிறுவர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிராமப்புறங்களில் வாழும் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களின் பாதுகாப்பு , சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுத்தல், வீட்டை அடிப்படையாக கொண்ட பராமரிப்பின் முக்கியத்துவம், திணைக்களத்தினுடைய மாற்றுப் பராமரிப்பு தேசிய கொள்கை திட்டம், சிறுவர் பங்கேற்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறுவர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய சகலவிதமான துன்புறுத்தல்களையும் குறைத்தல் அல்லது தடுத்தல் என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகதருக்கான மாவட்ட இணைப்பாளர் வீ. குகதாசனின் ஒருங்கிணைப்பில் பிரதேசசெயலாளர் க.அருணன் தலைமையில், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஐ; ஏற்பாட்டில் வழிப்புணர்வு நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது .