மட்டு முனையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

0
262

மட்டக்களப்பு முனைக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முனைக்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 48 பியர் டின்களும் 9 பியர் போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.

இதன்போது இவற்வை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.