மட்டு.ரோட்டரிக் கழகத்தின் 63வது
சேவை பணியேற்பு விழா

0
174

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 63ஆவது சேவை பணியேற்பு விழாவும் 2022-2023 ஆண்டுக்கான புதிய தலைவர் பதவி பிரமாண நிகழ்வு நேற்று நடைபெற்றது.இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக ரோட்டரிக் கழகத்தின் உறுப்பினர்களினால் அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் ரோட்டரிக் கழகத்தின் புதிய அங்கத்தவர்கள் அறிமுக நிகழ்வுகளும் தொடர்ந்து ரோட்டரிக்கழகத்தின் அங்கத்தவர்களை கௌரவித்து நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

ரோட்டரிக் கழகத்தின் 2022-2023ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக புஞ்சி அப்பு ரமண தாச தெரிவு செய்யப்பட்டார்.
ரோட்டரிக் கழகத்தின் முன்னாள் தலைவரும் நிகழ்வு ஏற்பாட்டாளருமான வி.பார்த்தீபன் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் நவநீதன் தலைமையில் நிகழ்வு நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் வி.கனகசிங்கம் மற்றும் ரோட்டரிக் கழகத்தின் சிரேஷ;ட உறுப்பினர்கள்,பெண் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் ,