மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் 2022-2023ஆம் ஆண்டுக்கான புதிய எட்டாவது தலைவராக வைத்திய கலாநிதி குகதாசன் மயூரேஷன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் மட்டக்களப்பு ஹெரிடேஜ் இன் 7வது ஆண்டு நிறைவு விழாவும் மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் 2022-2023 ஆண்டுக்கான புதிய தலைவருக்கான பதவி பிரமாண நிகழ்வும் ரோட்டரி கழக மட்டக்களப்பு ஹெரிடேஜ் தலைவர் ஜி.நிர்மல் ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு ரொட்டரி கழக ஹெரிடேஜ் உறுப்பினர்களினால் அதிதிகளான சிரேஷ;ட ரோட்டரி கழக ஹெரிடேஜ் உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்.அதிதிகள் வரவேற்பை தொடர்ந்து மங்கள விளகேற்றளுடன் ஆரம்பான நிகழ்வில் மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் உறுப்பினர்களின் கடந்த கால சமூக பணிகள் தொடர்பாகவும் அவர்களின் சேவை நலனை பாராட்டி நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து புதிய மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் தலைவராக வைத்திய கலாநிதி குகதாசன்
மயூரேஷன்; தெரிவு செய்யப்பட்டார்.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக
சிரேஷ;ட விரிவுரையாளரும்,வைத்திய நிபுணருமான கே.இ.கருணாகரனும்,விசேட அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மற்றும் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் மட்டக்களப்பு ஹெரிடேஜ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்