மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்திற்கு சைல்ட் பண்ட – சிறுவர் நிதிய சர்வதேச அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று இன்று விஜயம் செய்து,
அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களைப் பார்வையிட்டது.
வவுணதீவு சாளம்பைக்கேணியில் ஆடை உற்பத்திகான இளையோர் ஆற்றல் அபிவிருத்தி தொழில் வள நிலையத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்ட
பின்னர் அங்கு பிரதேச இயற்கை நேச இளைஞர் செயல்பாட்டு அணியினரால் நிகழ்த்தப்பட்ட இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் எனும் விழிப்புணர்வுக்
கலை நிகழ்வையும் குழுவினர் பார்வையிட்டதுடன் மரங்களையும் நாட்டி வைத்தனர்.
நிகழ்வில் சைல்ட் பண்ட – சிறுவர் நிதிய சர்வதேச அலுவலகத்தின் அவசர நிலை முகாமைத்துவ பணிப்பாளர் பி.பென்ஞ்ஜமின், சைல்ட் பண்ட – சிறுவர் நிதிய சர்வதேச
அலுவலகத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளர் திலக் திலகரத்ன, இடர் குறைப்பு நிபுணர் லாலனி விஜேசூரிய, அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று
அதிகாரி கே.கஜந்திரன், நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் வி.சுதர்ஷன், நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டு.வவுணதீவிற்கு சைல்ட் பண்ட்- சிறுவர் நிதிய சர்வதேச அதிகாரிகள் குழு விஜயம்