மட்டக்களப்பு வாழைச்சேனை சுற்று வளைவு சந்தியில் சுவாமி விபுலானந்தரின் திருஉருவச் சிலை இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் வைபவ ரீதியாக நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

முத்தமிழ் வித்தகரும் தமிழ் பண்டிதருமான சுவாமி விபுலானந்தருக்கு மலர் மாலை அணிவித்தும் அவரது புகழ் பாடியும் திருவுருவச் சிலை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்விடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் வாகன போக்கு வரத்திற்கான ஒளி சமிக்ஞை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
