மட்டு. விளாவட்டவான்ஸ்ரீ கணேஷா அறநெறி பாடசாலை நடாத்திய பொங்கல் விழா

0
152

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் விளாவட்டவான் ஸ்ரீ கணேஷா அறநெறி பாடசாலையும்
இணைந்து நடாத்திய பொங்கல்விழா பரத தர்சனம் அறக்கட்டளையின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
நிகழ்வில்; கலை கலாச்சார பவனியுடன் பொங்கல் சிறப்பு பூசைகள், சமய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு ‘உன் எதிர் காலம் உன் கையில்’ எனும் நூலும் அறநெறி ஆசிரியர்களுக்கு ‘வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே’ எனும் நூலும் பரத தர்சனம் அறக்கட்டளையினால் வழங்கப்பட்டது.
பிரதேச சபையின் தவிசாளர் சண்முகராஜா, பிரதேச கலாசார உத்தியோகஸ்தர்கள், ஆலய பிரதம குருக்கள், அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர்கள் மாணவர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.