மட்டு.ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்
மஹாளய யாகம்

0
149

பிரதோச விரதத்துடன் இணைந்ததாக மஹாளயம் இன்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகளுடன் நடைபெற்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹாளயத்தில் பித்துருக்களுக்கான மஹா யாகம் இன்று காலை நடைபெற்றது.

பிதுர்க்கடன்களை தீர்க்கும் சிறப்புக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் மஹாளய பித்துரு மஹாயாகம் நடாத்தப்பட்டது.

சிவனின் பிரதோச விரதமான இன்று தமது முன்னோர்களின் ஆத்மசாந்திக்காகவும் அவர்கள் மூலம் சந்ததிகள் சிறப்படையவும் சிவனின் அனுக்கிரகம்வேண்டி யாகம் நடைபெற்றது.

பெருமளவான மூலிகைகள் கொண்டு விசேட யாககுண்டபத்தில் பக்தர்கள் தங்கள் கைகளினால் மூலிகைகள் இட்டு யாகம் சிறப்பாக நடைபெற்று அதனை தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மாமாங்கேஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் விசேட பூஜையும் நடைபெற்றது.

இன்றைய மஹாளய பித்துரு மஹா யாகத்தில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.