மணலுக்குள் மறைத்து கொண்டுசெல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு

0
330

கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து பூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது மணலுக்குள் மறைத்து கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை முதிரை மரக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பரந்தன் பகுதியிலிருந்து அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றும் போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஏ-9 பிரதான வீதியில் ஒரே இலக்கத்தகட்டினைக் கொண்ட இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர்களை நீதிமன்ற நடவடிக்கைக்காக முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.