மன்னார் மாவட்டத்தில் சுமார் 40 நாட்களுக்கு மேலாக மண்ணென்னை விநியோகம் இடம்பெறாத நிலையில், மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத காரணத்தினால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்றொழில் அமைச்சரோ, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளோ, குறித்த விடயத்தில் கரிசனை காட்டுவதாக தெரியவில்லை என பள்ளிமுனை மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்ற நிலையில், எரிபொருள் பிரச்சினை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலையில் பல குடும்பங்களும் வறுமையில் வாடுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.