மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிராம மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை இவ் ஆண்டுக்கென புதிய நிருவாகம் தெரிவு செய்யும் கூட்டங்கள் கிராமங்கள் தோறும் இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில், இன்றைய தினம் புதுமண்டபத்தடி சமுத்த்தி வங்கிப் பிரிவில், இலுப்படிச்சேனை, புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, கொத்தியாபுலை, பாவற்கொடிச்சேனை உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளில் மேற்படி சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பொதுக் கூட்டமும் 2023ம் ஆண்டுக்கான புதிய நிருவாக தெரிவும் இடம்பெற்றது.
இவ் வங்கி வலயமட்டக் கூட்டங்களில் முகாமைத்துவப ;பணிப்பாளர், வங்கி வலய முகாமையாளர், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மண்முனை மேற்கு பிரதேசத்தில் 135 கிராம மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் புனரமைப்புச் செ ய்து பதிவு செய்யும் நடவடிக்கை இடம் பெற்று வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது