மதுபோதையில் வாகனம் செலுத்திய மூன்று சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹங்வெல்ல – புறக்கோட்டை, கடுவலை – கோட்டை மற்றும் கொஹிலவத்த – நகர மண்டபம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்துகளின் சாரதிகள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாரதிகள் சிலர் போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு பேருந்துகளை ஓட்டிச் செல்வதாக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, திடீர் சோதனை நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர்.
சந்தேக நபர்களை கைது செய்யும்போது, அவர்கள் செலுத்திய பேருந்துகளில் அதிகளவானோர் பயணித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் மூலம், அவர்கள் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.