மாளிகாவத்த வீட்டு தொகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷின் சடலத்தை அவர்களுது குடுப்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவானினால் நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பிரேத பரிசோதணைகள் நிறைவடைந்த பின்னர் மதூஷின் சடலத்தை அவரது திருமணமான மனைவியிடம் ஒப்படைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.