மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை – பிமல் ரத்நாயக்க!

0
9

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டின் பாதீட்டின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்தள விமான நிலையத்தை ஒரு பொருத்தமான நட்பு நாட்டுடன் இணைந்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். மத்தள விமான நிலையம் சுமார் 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்விமான நிலையத்திற்கான செலவீனம் 38.5 பில்லியன் ஆகும் .எனவே இந்நிறுவனத்தை இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு விரும்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.