மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொள்திறனை அபிவிருத்தி செய்வதற்கான இரு நாள் பயிற்சி
பாசறை மட்டக்களப்பில் உள்ள தொழில் வழிகாட்டல் நிலையத்தின் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இலங்கை தொழில் வழிகாட்டல் நிலையத்தின் மாவட்ட மனித வள இணைப்பாளர்
டபிள்யு.கொலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் கலந்து கொண்டார்.
சமூக சேவை திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் ஆர்.ஜீ. வீரசிங்க வளவாளராக செயற்பட்டார்.
Home கிழக்கு செய்திகள் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொள்திறனை அபிவிருத்தி செய்வதற்கான இரு நாள் பயிற்சி பாசறை