மனித வியாபாரத்திற்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு, இன்று, நுவரெலியா ஹட்டனில் இடம்பெற்றது.
கண்டி சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில், ‘அகப்படுவதற்கு முன்’ எனும் தொனிப்பொருளிலில், விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த, 20 சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் கைத்தொழில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், கண்டி சமாதானம் நிறுவனத்தோடு இணைந்து பயணிக்கும் சிவில் அமைப்பினருக்கு, பாராட்டு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில், சமாதான நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிரோஷன் ஏக்கநாயக்க உட்பட சிவில் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.