ஏழைகளுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி நிதியம், சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் குழுவின் 72 க்கும் மேற்பட்ட குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு உதவித்தொகைகளை வழங்கியுள்ளது என்று நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் டாக்டர் அனுர கருணாதிலக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவிடம் அவர் சார்பாக, செவ்வாய்க்கிழமை (06) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
அதில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குகின்றார்.