மன்னம்பிட்டி வீதியை சீர்செய்ய நடவடிக்கை

0
146

பொலன்னறுவை – மன்னம்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு பின்னர், குறித்த வீதியை சீர்செய்வதற்கு வீதி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொட்டாலிய பாலத்திற்கு அருகில் அண்மையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததுடன், 41 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, குறித்த வீதியில் வீதி சமிஞ்சைகள், அபாயச் சின்னங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.