மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில், இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம், இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக, விவசாய மற்றும் பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத்திட்டத்திற்கு அமைவாக, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால், திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாலைக்குளி கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வில், தொழில் முனைவோருக்கான விவசாய உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான பொருட்கள் மற்றும் கோழிக் குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், விவசாய திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், கிராம சேவையாளர் உட்பட பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.