மன்னாரில் சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு!

0
166

மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, அரச உத்தியோகத்தர்களுக்கான, சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு, இன்று நடைபெற்றது.

இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், கருத்தமர்வு நடத்தப்பட்டது.

மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்ற கருத்தமர்வில், பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

இதன் போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி திருமதி ஜே.எம். அன்ரறிடா, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள், கழிவு முகாமைத்துவம், அரச பணியாளர்களின் கடமைகள்’ தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி எம்.ஜீ.திசர, ‘மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணி, அரச சட்டங்கள் மற்றும் சவால்கள்’ தொடர்பில் கருத்துக்களை வழங்கினார்.

சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பில், அரச உத்தியோகத்தர்கள் அறிந்து கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக, கருத்தரங்கு அமைந்தது.

இதில், வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளார் பங்கேற்றதுடன், வாழ்வுதய சூழல் பாதுகாப்புத் திட்டப் பிரிவு இணைப்பாளர் ச.யேசுதாசன், கருத்துக்களை வழங்கினார்.