மன்னார் – தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதன் காரணமாக முழு வீடும் எரிந்து நாசமாகி இருந்தது.
குறித்த குடும்பம் மிகவும் வறுமை பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததுடன் 7 மற்றும் 9 ஆம் தரத்தில் கற்கும் இரு பிள்ளைகளுடன், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எரிந்த வீட்டை கூட சரிப்படுத்த முடியாத நிலையில் பலரிடம் உதவி கோரியிருந்தனர்.
இதனையடுத்து மன்னார் தமிழரசு கட்சியின் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.டினேஸனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த குடும்பத்தின் வீட்டின் கூரை அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டது.
மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கூரை அமைப்பதற்கான பொருட்களை வழங்கி வைத்தனர்.
உதவ முடிந்தவர்கள் குறித்த குடும்பத்திற்கான மேலதிக உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.