மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதியில், ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னாரில் உணவகத்தில் பணியாற்றி வந்த, ஹட்டன் பகுதியை சேர்ந்த, 22 வயதான சந்திரகுமார் என்பவர், நேற்றுக் காலை, வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 வருடங்களுக்கு மேலாக, மன்னார் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞர், மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், மன்னார் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.