மன்னார் நீதிவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் திருட்டு!

0
211

மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சில திருடப்பட்ட நிலையில், மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் இன்று காலை மன்னார் பொலிஸார் கைது செய்தனர். மன்னார் நீதவான் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக காணப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் காவலாளி ஆகிய இருவரும் திருடியதாக, மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை விரைந்து செயற்பட்ட மன்னார் பொலிஸார், மன்னார் நீதிமன்ற காவலாளியின் தங்குமிட பகுதியை சோதனையிட்டுள்ளனர். திருடப்பட்ட சான்றுப் பொருட்களான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் கசிப்பு ஆகியவற்றை மன்னார் பொலிஸார் மீட்டனர். சம்பவத்துடன் தொடர்பு பட்ட மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.