மன்னார் – புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று மாலை பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்விப் பணிமனையின் ஆரம்பக்கல்வி உதவிப்பணிப்பாளர் ராபி அஸ்லாம், கௌரவ விருந்தினர்களாக அருட்தந்தை அனுஸியஸ், மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் பிரின்ஸ் லெம்பேர்ட், மன்னார் இலங்கை வங்கி முகாமையாளர் ஜோன் ரஜீவ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கயிறு இழுத்தல், நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், தடைதாண்டல், மணப்பெண் அலங்காரம், வினோத உடைப் போட்டிகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவர்கள், பெற்றோருக்கான போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்று, பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.








