மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய பழைய மாணவர்களால் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு

0
185

மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைக்கும் நோக்கிலும், வித்தியாலயத்தில் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நோக்கிலும், பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து, மாபெரும் நிகழ்வை நடத்தியுள்ளனர்.

1983 முதல் 1999 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து, வித்தியாலய அதிபர் செபஸ்டியான் ராஜேஸ்வரன் பச்சேக் தலைமையில், நிகழ்வை முன்னெடுத்தனர்.

இன்று காலை, பழைய மாணவர்கள் சேர்ந்து, பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இருந்து, மோட்டார் சைக்கிள் பவனி மற்றும் நடைபவனியாக, பிரதான வீதி மற்றும் பேசாலை கிராம வீதி வழியாக சென்று, சென் மேரிஸ் வித்தியாலயத்தை அடைந்தனர்.

அதன் பின்னர், வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதுடன், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் போது, சென் மேரிஸ் வித்தியாலயத்தில் இதுவரை ஆசிரியர்களாக கடமை புரிந்த, பேசாலை கிராம ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில், பேசாலை பங்கு தந்தை ஏ.அன்ரன் அடிகளார் உட்பட, ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.