மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த பெருவிழா

0
252

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த பெருவிழாத் திருப்பலி, இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது. இன்று காலை 6.15 மணியளவில், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், 10 குருக்கள் இணைந்து, கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
பேசாலை புனித வெற்றி நாயகி அன்னையின் வருடாந்த திருவிழா, கடந்த 30 ஆம் திகதி, கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டன. நேற்று மாலை, நற்கருணைப் பெருவிழா ஆராதனை இடம்பெற்று, இன்று காலை, திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சொரூப பவனி இடம்பெற்று, மக்களுக்கு ஆசி வழங்கப்பட்டது. இன்றைய திருவிழாவில், போசாலை மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று, புனித வெற்றி நாயகி அன்னையின் ஆசீரை பெற்றுக்கொண்டனர்.