மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில், பொலிஸார், போதைப்பொருள் தடுப்பு பரிசோதனை

0
156

மன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில், பொலிஸார், மோப்ப நாய்களின் உதவியுடன், விசேட போதைப்பொருள் பரிசோதனைகளில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண ரீதியாக, போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில், இன்று அதிகாலை முதல், வீதிகள், பாடசாலைகள், பொது இடங்களில், பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை சூழலில், போதைப்பொருள் பாவனை அறிகுறிகள் காணப்படுகிறதா? என்பது தொடர்பிலும், மோப்ப நாய்களின் உதவியுடன், பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை, தொடர்ச்சியாக, பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.