மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு மீள் புனரமைப்பு

0
115

மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவின் நிதி உதவியுடன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு முழுமையாக மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 37 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்துடன் இணைந்து மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா குறித்த பணியை முன்னெடுத்துள்ளது.

முதல் கட்டமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு முழுமையாக மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியை, மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா கிளையின் பொறுப்பு நிலையின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் நேற்று வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.

இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் புஸ்பகாந்தன், மன்னார் நலன்புரிச் சங்கத்தின் பிரதி நிதிகளான வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதன், பொறியியலாளர் ராமகிருஷ்ணன், பிரதம பொறியியலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.