மன்னாாில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு!

0
322

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை நேற்று (24) திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸ் மீட்டுள்ளனர்.


மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை (24) மாலை குறித்த கடற்கரை பகுதிக்குச் சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்ற சட்ட வைத்திய அதிகாரி சடலத்தை பார்வையிட்டதோடு,சடலத்தை உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ள மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.