மன்.புனித செபஸ்தியார் பேராலய நத்தார் நள்ளிரவு திருப்பலி

0
111

மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி, மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.