மரக்கன்றுகளுக்கு தீ வைத்து எரித்த விசமிகள்!

0
144

ஏ-9 நெடுஞ்சாலை, ஆனையிறவு பகுதியில், தன்னார்வ அமைப்பொன்றினால் வீதியின் இருமருங்கிலும் நடப்பட்டு பராமரிப்புச் செய்யப்பட்டுவந்த மரக் கன்றுகளுக்கு விசமிகள் தீ வைத்ததில் அவை தீயில் கருகியுள்ளன.

மரங்கள் நாட்டப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி, அதனை ஊக்குவித்து வருகின்ற நிலையில், இவ்வாறான ஒரு செயற்பாடானது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.