மரதனோட்ட நிகழ்வில் மயங்கி வீழ்ந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்த, அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட
திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஜெயக்குமார் விதுஜனின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
நூற்றுக் கணக்கான பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் ஜெயக்குமார் விதுஜனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.
உயிரிழந்த மாணவனின் உடல், மருத்துவப் பரிசோதனைகளை அடுத்து நேற்றுப் பிற்பகல் வேளையில் கும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருக்கோவில் 03 துரையப்பா வீதியில் உள்ள மாணவனின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, உடல் ஊர்வலமாக திருக்கோவில் பிரதான வீதி வழிகாக கொண்டு
செல்லப்பட்டு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுத் திடலில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர், திருக்கோவில் இந்து மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.