நுவரெலியா தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் நேற்று மாலை, ஒப்பந்த அடிப்படையில்
மரங்களை வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது மரக்குற்றியொன்று வீழ்ந்தத்தில், அவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரின் நெஞ்சு பகுதியிலேயே மரக்குற்றி தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய செல்லதுரை மணிமாறன் என்பவரே உயிரிழந்தவராவர்.