இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு மருதமுனையில் எம்.எம்.நப்சார் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்காக 2 நிமிட மௌன பிராத்தனையும் இடம்பெற்றது.
நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.வை.செனவிரத்ன கல்முனை மாநகர சபை முதல்வர் றக்கீப் சிறப்பு அதிதியாக அல்மனார் தேசிய பாடசாலை கல்லூரி அதிபர் அப்துல் ஹசிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.