விசேட அதிரடிப் படையினரால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவையை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பிராத்தனை நிகழ்வு மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசலில் அதன் தலைவர் முகர்ரப் தலைமையில் இன்று நடைபெற்றது.இலங்கையில் விசேட அதிரடிப்படையினரின் சேவை ஆரம்பிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படையினரால் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொதுமக்கள் சேவையை பாராட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட துஆ பிரார்த்தனையை பள்ளிவாசலின் இமாம் மௌலவி ஏ.ஆர்.எம்.ஜெரிர் நிகழ்த்தினார்.
பெரியநீலாவனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.எஸ்.ரட்நாயக்க தலைமைலான குழுவினர் இங்கு வருகை தந்திருந்ததுடன் நிகழ்வின்போது விசேட அதிரடிப்படையினரால் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைத்தார்கள் நிகழ்வில் பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர்கள், கல்விமான்கள் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.