கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.ஜீப்பை சோதனை செய்ததில் அது பதிவு செய்யப்படவில்லை என்பதும் செசி மற்றும் என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி குறித்த ஜீப் வண்டி சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜெயஸ்ரீ உயன பல்லேகல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.