மறைந்த பேராசிரியர் யோகராசா இறுதியஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது

0
238

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் செல்லையா யோகராசாவின் பூதவுடல், பெருந்திரளான
மக்களின் அஞ்சலிக்கு மத்தியில், மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் உள்ள மின் தகன சாலையில், தகனம் செய்யப்பட்டது.
கடந்த 7ம் திகதி காலமான பேராசிரியர் யோகராசாவின் பூதவுடல் மட்டக்களப்பிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
வடக்கு கிழக்கு மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பெருமளவிலான
மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிக் கிரியைகள் இன்று காலை இடம்பெற்றது.
கலை இலக்கியவாதிகள், கிழக்குப் கல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும்
கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினர்.
பேராசிரியர் செல்லையா யோகராசாவின் எழுத்துப்பணி, அவரது இலக்கியம், பல்கலைக்கழகத்துக்கு அவர் ஆற்றிய சேவைகள் என பல விடயங்கள்
நினைவு கூரப்பட்டன.
வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் அவரிடம் கற்ற மாணவர்களும் அஞ்சலியுரையாற்றினர்.
பேராசிரியர் யோகராசா, யாழ்ப்பாணம் வடமராட்சி, கரணவாய் தெற்கு, கரவெட்டியை பிறப்பிடமாகவும்;, மட்டக்களப்பு பெயிலி முதலாம் குறுக்கு வீதியை
வசிப்பிடமாகவும் கொண்டவர்.
இவர் தமிழ் பாரம்பரிய கோட்பாடுகளுடன் வாழ்ந்ததுடன் பன்மைத்துவ சமூக இலக்கிய கலாசாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார்.
இன ஒற்றுமையை கட்டி வளர்ப்பதிலும் பாடுபட்டவர்.
இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலரும் உயர்ந்த துறைசார்ந்தவர்களாக இலங்கைளிலும் வெளிநாடுகளிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.