நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை அதிபர், ஆசிரியர் சங்கங்கள் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து, சுகயீன விடுமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது ஒரு சில மாணவர்கள் பாடசாலைகளுக்கு சென்ற போதிலும் அதிபர், ஆசிரியர்கள் வருகை இன்றி மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லும்நிலை காணப்பட்டது.
இதேவேளை சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.