மலையகத்தில் அரசியல் ஆர்வாலரான ராமன் செந்தூரன் தலைமையில் மலையக மக்கள் சக்தி எனும் புதிய கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் பிரச்சினைளை வெளிக்கொண்டு வரவும் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கிலும் குறித்த கட்சி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் பெயர், கொடி, வர்ணம் என்பன மக்கள் முன்னால் வெளியிடப்பட்டது.
இதன்போது கொட்டகலை, ஹட்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததோடு இனிவரும் காலங்களில் மிக விரைவான செயற்பாடுகளை மக்களின் நலன் கருதி மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் தலைவர் ராமன் செந்தூரன் குறிப்பிட்டுள்ளார்.



