மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபவனி மதவாச்சியை வந்தடைந்துள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பகுதியிலிருந்து இன்று காலை ஆரம்பமான நடைபவனி மதியம் மதவாச்சியை அடைந்துள்ளது.
இதேவேளை தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியும் இன்றையதினம் மதவாச்சியை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.