30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மலையக தலைவர்களுக்கு 44,000 வீடுகளை கட்ட 50 ஆண்டுகள்

மலையக தலைவர்கள் 44,000 வீடுகளை கட்ட, 50 ஆண்டுகளை கடத்தியிருக்கின்றனர்.” என கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்டங்கள் எங்கும் குடியிருப்புகள் என்பது லயன் அறைகளாகவே உள்ளது. அதற்கு மாற்றீடான தனி வீடுகள் என்பது அங்கும் இங்கும் ஒரு சிலவே காணப்படுகின்றது.

குடியிருப்புகளின் பிரச்சினை தீர்க்க முடியாத அளவிற்கு சிக்கலானதாக மாறியிருக்கின்றது. இந்நிலைமை தோன்ற காரணம் மலையக தலைவர்கள் 44,000 வீடுகளை கட்ட, 50 ஆண்டுகளை கடத்தியிருக்கின்றமையே ஆகும்.

இன்று ஒரு லயன் அறையில் இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்கின்றனர். அத்தோடு இடவசதியிண்மையால் பல குடும்பங்கள் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.

இவை எவற்றிலும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகும். இன்று தோட்டத்தில் தொழில் செய்யாதவர்களை இவற்றில் இருந்தும் வெளியேற்றுகின்ற நிலைமை தோன்றியிருக்கிறது.

பெருந்தோட்ட மக்களை லயன் அறையில் இருந்து முழுமையாக வெளியே கொண்டு வருவதற்கான எந்த ஒரு வேலை திட்டமும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

மலையக தலைவர்கள் கடந்த 50 வருடங்களாக செய்த தவறுகளே இன்று ஒட்டுமொத்தமாக வெளிப்படுகின்றது. கடந்த ஐம்பது வருடங்களில் 44,000 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றது.

இன்று சிலர் அதனை யார் கட்டினார்கள் என்று விவாதிக்கின்றனர். அவ்வாறு கட்டியுள்ள வீடுகளுக்கு கூட இன்னும் உரித்தாவணங்கள் கிடையாது.

இதனை எடுத்து சொன்னால் விமர்சன அரசியல் செய்ய வேண்டாம் என்கின்றார்கள். இல்லை எங்களை விமர்சிக்காது அரசியல் இல்லை என்கின்றார்கள்.அவரவர்கள் செய்த சாதனையையே எடுத்துக் காட்டுகின்றோம். இவை உண்மையான புள்ளி விபரங்கள். இந்த வேதனையை சொல்வது எவ்வாறு விமர்சனமாகும்? என்பது மட்டுமல்ல, பிரச்சினையை மீண்டும் மீண்டும் சொன்னால் தான் தீர்வை அடைய முடியும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles