உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், மலையக பெருந்தோட்டப் பகுதிகளில்
இம்முறை தொழிலாளர் தினம் தோட்டவாரியாக கொண்டாடப்பட்டது.
அந்தவகையில், பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு தோட்ட ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்று கொடிகம்பத்திற்கும் விஷேட பூஜைகள் நடத்தி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
குறித்த தோட்டப்பகுதியில் தொழில் புரிகின்ற மூத்த தொழிலாளர்களுக்கு பூ மாலை அணிவித்து, தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிராதன இரண்டு கொடிக்கம்பங்களிலும் இரண்டு தொழிற்சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு பறக்கவிடப்பட்டன.
இந்த மே தின நிகழ்வில் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.