25 C
Colombo
Monday, November 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மலை நாட்டில் கடும் காற்றுடன் தொடர் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையை தொடர்ந்து பல மாவட்டங்களில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நேற்று பல பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் கடும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வட்டவளை பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் பாரிய மரம் ஒன்று ரயில் என்ஜின் பகுதியில் சரிந்து வீழ்ந்தமையால் ரயில் சேவைகள் தடைப்பட்டன.
குறித்த ரயில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற போது மூன்று இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டு இன்று அதிகாலை 3.30 மணியளவிலேயே கொழும்பு சென்றதாக ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ரயில் பாதையில் வீழ்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமையால், புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்று அதிகாலை ஹட்டன் லக்ஸபான பிரதான வீதியில் மிக்போர்ட் பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையால்
அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழையால் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். மழை காரணமாக பல பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மண் மேடுகளுக்கும் மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலைய சுட்டிக்காட்டியுள்ளது.
கடும் காற்று வீசுவதனால் மரங்களுக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles